திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலை பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உயர் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை வகித்தார். பள்ளி முதுகலை தமிழாசிரியர் அண்ட் ஆரோக்கிய ஜோதி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் மாணவர்கள் திரளாக பங்கேற்று பயன் பெற்றனர்.