ஆட்டோ டிரைவருக்கு காப்பீடு அட்டை வழங்கிய அதிமுக நிர்வாகி

58பார்த்தது
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா ஏற்பாட்டில் நெல்லையில் 70 நாள் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதில் 58வது நாள் நிகழ்ச்சியாக நேற்று சமாதானபுரம் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியத்திற்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விபத்து காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. இதில் அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா கலந்து கொண்டு அட்டையினை ஆட்டோ டிரைவருக்கு வழங்கினார். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி