தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆட்டோ பயணக் கட்டணம் உயர்கிறது.
முதல் 2 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஓலா, ஊபர், ரெட் டாக்ஸி உள்ளிட்ட டாக்ஸி புக்கிங் செயலிகள் மூலமாக தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. இந்த சூழலில், தற்போது ஆட்டோ பயணக் கட்டணம் உயர்கிறது.