திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் நெல்லை சந்திப்பு பேரங்காடி வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று (பிப்ரவரி 14) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் இரா. சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள அலுவலர்களிடம் பல்வேறு கலந்துரையாடல் நடத்தி ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.