இஸ்லாமியர்களின் பண்டிகையில் ஒன்றான மீலாது நபி வருகின்ற 16ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நேற்று நெல்லை மாநகரில் உள்ள பள்ளிவாசல்களில் மாலை 6. 30 மணியளவில் நபி துதி பாடல் நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நபி துதி பாடல் நிகழ்ச்சியானது வருகின்ற 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 16ஆம் தேதி மீலாது நபி பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டை பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.