திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் சுத்தமல்லி கிராமத்தில் இன்று (செப்.28) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுச்சாமி, முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவங்கி வைத்தனர். இந்த சிறப்பு முகாமின் முடிவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.