நெல்லை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அருணாபேரி கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் எம்பி ராபர்ட் புரூஸ்சின் எழுச்சி பேரணியில் கலந்து கொண்டு ஊர் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தியறிந்த எம்பி ராபர்ட் புரூஸ் நேற்று உடனடியாக மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாகவும் உறுதியளித்தார்.