நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. எளிமையான கவுன்சிலர் என பெயர் பெற்ற ராமகிருஷ்ணன் மேயரான பிறகு நடந்த முதல் கூட்டம் என்பதால் பரபரப்பு நிலவியது. ஆணையர் சுக புத்ரா துணை மேயர் ராஜூ மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் குடிநீர் திட்டம் சாலை போன்ற திட்டம் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.