பேட்டை மின்வாரிய பிரிவுக்கு உட்பட்ட (11 கேவி) பேட்டை பீடரில் செக்கடி பகுதியில் அரசு பேருந்து மோதி உயர் அழுத்த மின் கம்பம் சேதம் அடைந்துள்ளது. இதை மாற்றும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பேட்டை செக்கடி, நெல்லையாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று (மார்ச் 29) பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும். பழுது சரிபார்த்து மின் இணைப்பு வழங்கப்படும் என்று நெல்லை மாவட்ட மின்வாரியம் அறிவித்துள்ளது.