நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி சாமி தரிசனம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி வனச்சரக துணை இயக்குனர் இளையராஜாவிடம் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் இன்று காலை கோரிக்கை மனு அளித்தனர்.