புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் 2025-2026 ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று (மார்ச். 12) அவர் தாக்கல் செய்தார். அப்போது, அனைத்து விவசாயிகளுக்கும் மழைகால நிவாரணமாக ரூ.2000 வழங்கப்படும், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.