மதுரையில் ஆன்லைன் கேமால் 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டாக பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து ஆன்லைன் கேம்கள் விளையாடி வந்த நிலையில் திடீரென உயிரை மாய்த்தக் கொண்டுள்ளார். செல்போனை உடைத்து விட்டு வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த நிலையில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். சிறுவன் மரணம் தொடர்பாக கீரைத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.