தென்கிழக்கு மத்திய இரயில்வே (SECR) சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள அதன் டிவிஷனல் ரயில்வே மேலாளர் அலுவலகம் மற்றும் வேகன் பழுதுபார்க்கும் நிறுனத்தில் 1,003 பயிற்சிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெல்டர், டர்னர், ஃபிட்டர், எலக்ட்ரீசியன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளன. 10ஆம் வகுப்புடன், ஐடிஐ படித்திருப்பது அவசியம். விண்ணப்பங்களை ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் apprenticeshipindia.org இல் உள்ள அப்ரெண்டிஸ்ஷிப் போர்டல் மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.