மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் இன்று தமிழகம் வந்தார். முன்னதாக மதுரை செல்லும் வழியில் அவர் நெல்லை வண்ணாரப்பேட்டையில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்தார். இங்கு மதிய உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் ஓய்வுக்கு பின் மதுரைக்கு கிளம்பி செல்ல இருக்கிறார். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.