விவசாயிகளின் தோட்டங்களில் சொட்டுநீர் பாசனம் அமைக்க, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் மானியத்தில் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இப்படியான நிலையில் விவசாயிகளை தொடர்பு கொள்ளும் அடையாளம் தெரியாத நபர்கள், ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரை சொல்லி சொட்டுநீர் பாசன உபகரணம் வழங்குவதாகக் கூறி அவர்களிடம் பணம் பறித்து மோசடி செய்வதாகவும், அத்தகைய நபர்களை விவசாயிகள் நம்ப வேண்டாம் எனவும் வேளாண் துறையினர் எச்சரிக்கின்றனர்.