சேரன்மகாதேவி அருகே திருவருத்தான்புளியைச் சேர்ந்த செலின் ஷிஜா என்பவரின் குடும்பத்திற்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரது குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று செலின் ஷிஜாவிடம் சுப்புராஜ் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து செலின் ஷிஜா அளித்த புகாரின் பேரில் இன்று (மார்ச் 28) சேரன்மகாதேவி போலீசார் சுப்புராஜை கைது செய்தனர்.