திருடப்பட்ட காரின் உரிமையாளரை மோதி தூக்கிய வீடியோ

70பார்த்தது
திருடப்பட்ட காரின் உரிமையாளரை மோதி தூக்கிய வீடியோ
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஹிம்மத் சிங் என்பவர் மே 5ம் தேதி தனது காரை வீட்டில் நிறுத்தி இருந்தார். ஆனால் இந்த கார் சில நபர்களால் திருடப்பட்டது. இந்த நிலையில் மே 9ம் தேதி சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது திருடப்பட்ட தனது காரை சிலர் ஓட்டி வருவதை கண்டார். உடனே கார் முன் வந்து நின்றார். ஆனால் காரை ஓட்டி வந்த நபர்கள் அவரை பொருட்படுத்தாமல் வேகத்தை அதிகரித்தனர். இதனால் காரின் முன் பகுதியில் தொங்கியபடியே சுமார் 200 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி