சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் விதிப்படி சில உணவுப் பொருட்கள் விமானத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. மீன், இறைச்சி, தேங்காய், மிளகாய், ஊறுகாய், அரிசி, பருப்புகள், மிளகாய் தூள் உட்பட தூள் வடிவத்தில் இருக்கும் அனைத்து மசாலா பொருட்களும் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்ட பொருட்களாகும். 100 மில்லி வரை தேன், தண்ணீர் பாட்டில், பானங்கள், உலர் கேக், பழங்கள், காய்கறிகள், இனிப்புகள் ஆகியவை விமானத்திற்குள் அனுமதிக்கப்படும்.