பிரதமர் மோடியுடன் பதவியேற்கும் அமைச்சர்கள் இவர்கள்தான்!

8934பார்த்தது
பிரதமர் மோடியுடன் பதவியேற்கும் அமைச்சர்கள் இவர்கள்தான்!
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார். புதிய அமைச்சரவையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பல எம்.பி.க்களுக்கு இடம் கொடுப்பதாகத் தெரிகிறது. இந்தப் பட்டியலில் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், பிரஹலாத் ஜோஷி, ஜோதிராதித்ய சிந்தியா, அர்ஜுராம் ராம் மேக்வால், சிராக் பாஸ்வான், அனுப்ரியா படேல், ஜீதன் ராம், மஞ்சி, ஜெயந்த் சவுத்ரி, எச்.டி.குமாரசாமி, ஆந்திர தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் ராம்மோகன் நாயுடு மற்றும் பெம்மாசானி சந்திரசேகர் ஆகியோர் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி