விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் உள்ளது என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய விஜய், "அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கூட பங்கேற்க முடியாத அளவிற்கு விசிக தலைவர் திருமாவளவனுக்கு கூட்டணி கட்சிகளால் எவ்வளவு பிரஷர் இருக்கும் என யூகிக்க முடிகிறது. விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போய்விட்டது. இருந்தாலும், அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.