சிவபெருமனின் மறு அம்சமாக இருக்கும் கால பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி எனப்படும். கால பைரவருக்கு பொதுவாக ராகு கால நேரத்தில் தான் பூஜை செய்வது சிறப்பாகும். ஆனால், வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டிய கட்டாயம் கிடையாது. எனவே, வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் இன்று (செப்.11) நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். ராகு காலம் போய்விட்டதே என்ற கவலை வேண்டாம்.