விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டை வருகிற அக்டோபர் 27ஆம் தேதி நடத்த விக்கிரவாண்டி காவல் துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், மாநாடு தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. அதில், மாவட்ட பொறுப்பாளர்கள், அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டிற்காக குழு அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.