உடலில் டீசல் ஊற்றி பெண் தற்கொலை முயற்சி

59பார்த்தது
உடலில் டீசல் ஊற்றி பெண் தற்கொலை முயற்சி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரம், மூலக்கடையைச் சேர்ந்தவர் லிங்கராஜ் மனைவி நிரஞ்சனாதேவி. இவரிடம் கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆண்டிபட்டி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் பிரபாகரன், குடும்பச் செலவுக்கு கடன் கேட்டாராம். நிரஞ்சனாதேவி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், அவரது தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்டு, சிறிது நாள்களில் நகையை மீட்டுத் தருவதாக கூறி அவரிடமிருந்து பிரபாகரன் 25 பவுன் தங்க நகைகளை பெற்றுச் சென்றராம். தற்போது பிரபாகரன் தனது நகைகளை மீட்டுத் தராமல் தன்னை மோசடி செய்து விட்டதாக புகார் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிரஞ்சனாதேனி உடலில் டீசல் ஊற்றிக் கொண்டு தீக் குளிக்க முயன்றார். அப்போ து, அங்கு பாதுகாப்புப் பணி யிலிருந்த போலீஸார், ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேனி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி