புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலானது, மகாராஷ்டிராவில் பராண்டா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த ரயிலின் ஒரு பெட்டியில் தீ பற்றியது. இதனால், அச்சமடைந்த பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, ரயில் பாதையில் ஓடியுள்ளனர். அப்போது பயணிகள் மீது அவ்வழியாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்துள்ளார்.