மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் நடப்பாண்டு 30,000 ஏக்கர் மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு பருவ மழையில் தப்பிய பயிர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதனால் கூடுதல் செலவு செய்து மருந்துகள் அடித்து பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினார். இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த கனமழை காரணமாக தரங்கம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாரான சுமார் 8,000 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மூழ்கியுள்ளது.