அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “நிதி விடுக்காத ஒன்றிய பாஜக அரசை கண்டிக்காமல், தமிழ்நாடு அரசு மீது இபிஎஸ் அவதூறு பரப்பி வருகிறார். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா?. தனது இயலாமையை மறைக்கவே, மக்களின் நலனில் அக்கறை கொண்டு திமுக மீது அவதூறு பரப்புகிறார். இதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்” என்றார்.