தைப்பட்டத்தை தவறவிடாமல் நெல்லுக்கு பின் உளுந்து விதைப்பது உத்தமம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை உன்னதமான ஆலோசனையை வழங்கி உள்ளது. காவிரி பாசனப் பகுதியில் சம்பா மற்றும் தாளடி அறுவடைக்கு பின் மண்ணில் இருக்கும் ஈரம் மற்றும் காற்றில் உள்ள பனி ஈரப்பதத்தினை கொண்டு எந்தவித நில தயாரிப்பு இல்லாமல் நல்ல மகசூல் எடுக்கும் வாய்ப்பு தைப்பட்ட தரிசு நில உளுந்து சாகுபடியில் உள்ளது. எனவே தைப்பட்டத்தை தவறவிடாமல் உளுந்து, பச்சை பயிறு சாகுபடி செய்யுங்கள் என வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.