கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் BBThanda-வைச் சேர்ந்தவர் மல்லேஷ் நாயக். இவருக்கும் மதுரா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த 6-7 ஆண்டுகளாக, மதுராவை மல்லேஷ் நாயக் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களாக தனது பெற்றோர் வீட்டில் இருந்த மதுரா மீது ஆத்திரமடைந்த மல்லேஷ் தனது மகன் கண்முன்னே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். படுகாயமடைந்த மதுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.