சென்னையில் கடந்த 2019ஆம் ஆண்டு செனாய் நகரில் குழந்தையை கடத்திய கும்பல், ரூ.60 லட்சம் கேட்டு பெற்றோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை மீட்ட போலீசார், குழந்தை வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் அம்பிகா, அவரது நண்பர் கலிமுல்லா ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், குழந்தையை கடத்திய வழக்கில் வீட்டு பணிப்பெண், அவரின் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.