தேனி புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

64பார்த்தது
தேனி பிசிபட்டியில் புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணி

தேனி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் புத்தக திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி பிசி பட்டியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தலைவர் சுமிதா சிவக்குமார் தொடங்கி வைத்தார். இதில் தென்கரை நூலக வாசகர் வட்ட தலைவர் அன்புகரசன், நல்நூலகர் சவடமுத்து மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு வாசிப்பு பழக்கம் குறித்து விழிப்புணர்வை, ஏற்படுத்தி சென்றனர். நிகழ்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி