தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “மருதமலை கோயிலில் ரூ.37 கோடியில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் உலகமே வியக்கும் வகையில் பிரமாண்ட முருகன் சிலை அமைக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் கோவை வடக்கு தொகுதியில் நிச்சயம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்துள்ளார்.