தமிழ்நாட்டில் யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற சிறப்பு வகுப்பு அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதில், தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் நிதி வழங்கப்பட உள்ளது. 10 மாதங்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். நேர்முக தேர்வில் வென்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.