தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டி துவக்கப்பள்ளியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நன்செய் அமைப்பு இணைந்து 'மீண்டும் மஞ்சப்பை' என்கிற திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஏப். 4) நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. மரக்கன்றுகள் நடவும் செய்யப்பட்டன. துணிப்பையின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நன்செய் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த செந்தில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், பெருமக்கள் மற்றும் மாணவ மாணவியர் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.