திண்டுக்கல், குமுளி ரயில் திட்டத்தை வலியுறுத்தி நடைபயணம்

77பார்த்தது
தேனியில் லோயர் கேம்ப் திண்டுக்கல் ரயில் திட்டத்தை வலியுறுத்தி நடை பயணம் தேனி எம்பி துவக்கி வைத்தார்

திண்டுக்கல்-லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்டத்தினை விரைந்து அமல்படுத்த கோரி திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதைத் திட்டம் போராட்டக் குழுவின் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் தேனி முதல் திண்டுக்கல் வரையில் நடை பயணம் மேற்கொள்ளும் நிகழ்வு இன்று துவங்கியது. தேனி பங்களாமேட்டில் துவங்கிய இந்த நடைபயண நிகழ்வினை தேனி எம். பி தங்க தமிழ்ச்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார். போராட்டக் குழு நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி