அமைச்சர் மா.சுப்பிரமணியன் பற்றி கருத்து பதிவிட்டது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை திருவான்மியூர் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை காப்பாற்றியது போலவே, கட்டப்பஞ்சாயத்து செய்து கொலை மிரட்டல் விடுத்த ஒரு வழக்கிலும் ஒரு ரவுடியை சொந்த ஜாமீனில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுவித்துள்ளதாக யூடியூபர் சவுக்கு சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக நாளை (மார்ச் 24) நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.