மத்திய அரசின் 'பிஎம் கிசான்' திட்டப் பயனாளிகளுக்கு தனியாக அடையாள எண் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக இந்த மாதம் மார்ச் 31ம் தேதிக்குள் விவசாயிகள் தங்களின் நில ஆவணங்களான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுடன் அரசு கள அலுவலர்கள் அல்லது இ-சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தி குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் 9,59,25,578 பேரும், தமிழகத்தில் 21,94,651 பேரும் பயன்பெறுகின்றனர்.