சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறியதாவது, “CSK என்னுடைய அணி, எனது உரிமை. நான் விரும்பும் வரை CSK-வுக்காக தொடர்ந்து விளையாடுவேன். நான் காயமடைந்து சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்தாலும் கூட என்னை இழுத்து வந்து விளையாட வைத்துவிடுவார்கள்" என சென்னை மீது உள்ள அன்பை வெளிப்படையாக காட்டினார். மேலும், தோனிக்கு 43 வயதான நிலையில் 2025 ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற மிக வயதான வீரர் என கூறப்படுகிறது.