கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜீவனஹள்ளி பகுதியில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், ரஷா என்ற 3 வயது குழந்தை தனது தந்தையுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த மரம் ஒன்று குழந்தை மீது முறிந்து விழுந்தது. காயமடைந்த குழந்தையை அவரது தந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.