கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் தனியார் மஹாலில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாமினை நடத்தினார்கள் இந்த முகாமிற்கு உத்தமபாளையம் ஆர்டிஓ தாட்சாயினி தலைமை வைத்தார்.
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த முகாமினை தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகளிடமும் பொதுமக்கள் நேரடியாக சென்று தங்களது குறைகளை மனுக்களாக பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன இந்த முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களை எழுதிக் கொடுத்தனர்.
பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் துறை சார்ந்த அதிகாரிகள் பரிசீலனை செய்து விரைவாக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.