தமிழகத்தில் வருடத்துக்கு 82 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. மேலும், “தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்திருக்கிறது. நடப்பாண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 89 ஆயிரத்து 838 ஆக உள்ளது. இதில் 3 ஆயிரத்து 838 குழந்தைகள் இறந்துள்ளது. இது இறப்பு விகிதத்தில் 7.8 சதவீதம் ஆக பதிவாகியிருக்கிறது” என தெரிவித்துள்ளது.