ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (டிச., 14) காலை உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து அவரது தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 2023 மார்ச் முதல் எம்எல்ஏவாக இருந்தார். இந்த நிலையில், இந்த தொகுதிக்கு 2வது முறையாக இடைத்தேர்தல் நடத்தப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.