ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவில், "மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவு செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்" என பதிவிட்டுள்ளார்.