சர்க்கரை நோயாளிகள் மற்றும் ப்ரீ டயபெடிக் நோயாளிகள் கற்றாழை ஜூஸ் குடித்து வருவது நல்லது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஜூஸ் உடலில் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதை குடிக்கத் தொடங்கும் முன் மருத்துவரின் ஆலோசனையை பெற்று அதன் பிறகு அதை குடிக்க அறிவுறுத்தப்படுகின்றது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் அபாயம் சற்று அதிகமாக இருக்கும். கற்றாழை ஜூஸ் குடிப்பது இதற்கும் நன்மை பயக்கும்.