ஆஸ்திரேலியாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட கொடிய வைரஸ் மாதிரிகள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள குயின்ஸ்லாந்து பொது சுகாதார வைராலஜி ஆய்வகத்திலிருந்து ஹென்ட்ரா வைரஸ், லிஸ்ஸா வைரஸ், ஹண்டா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்களின் 323 மாதிரிகள் காணாமல் போயிருப்பதாக குயின்ஸ்லாந்து அரசு அறிவித்துள்ளது. இந்த வைரஸ் மாதிரிகள் 2023 ஆகஸ்ட் மாதமே மாயமான நிலையில், இதுதொடர்பான விசாரணைக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.