மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் இன்று (டிச., 14) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்த நிலையில், மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்ட பிறகு, பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். தொடர்ந்து அவரது உடல் சென்னை ராமாவரம் மின் மயானத்தில் நாளை (டிச., 15) தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.