காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் குறிப்பில், இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மருத்துவர்களை தொடர்பு கொண்டு, உடல்நலன் குறித்து அறிந்து வந்தேன். தற்போது அவரது மறைவு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. மிகப்பெரும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனின் மறைவு வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.