காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். காங்கிரஸ் - தமாக பிளவுபட்டபோது அதனை இணைப்பதற்கு பாலமாக செயல்பட்டவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்" என்றார்.