தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா உப்புத்துரை பகுதியைச் சேர்ந்த ராம் கண்ணன் என்பவரது மனைவி லதா (38 வயது). இவரது வீட்டில் நான்கு ஆடு மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 12ஆம் தேதி அன்று, வீட்டின் அருகில் கட்டி வைத்திருந்த ரூபாய் 8000 மதிப்பிலான ஆட்டை காணவில்லை. எங்கு தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து லதா கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.