பெரியகுளத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் கைதான 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட போதைப் பொரு ள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கம்பம், உலகத்தேவா் தெருவைச் சோ்ந்தவா்கள் சின்னமாயன் மகன் ரஞ்சித் (43), கோட்டையன் மகன் சூரியா (34), கூடலூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சரவணன் (37). இவா்கள் 3 பேரையும் கடந்தாண்டு, அக். 9-ஆம் தேதி பெரியகுளத்தில் காரில் கஞ்சா கடத்திச் சென்றதாக தென்கரை காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். செங்கமலச்செல்வன் குற்றம்சாட்டப்பட்ட ரஞ்சித், சூரியா, சரவணன் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.