“ஜிப்லைன் பழுதடையவில்லை” - அமைச்சர் விளக்கம்

55பார்த்தது
“ஜிப்லைன் பழுதடையவில்லை” - அமைச்சர் விளக்கம்
சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் உள்ள ஜிப்லைன் நேற்று (அக்.12) பழுதானது. இது குறித்து அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஜிப்லைனில் சென்றவர்களின் இருக்கைக்கு தேவையான உடல் எடையில் இருந்த வேறுபாட்டின் காரணமாக 10 விநாடி தேக்கம் ஏற்பட்டது. ஜிப்லைன் என்பது பூங்காவில் உள்ள புவியீர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டது. அதில் பழுதடைவதற்கு ஒன்றுமில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி